2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள்கள் கொளுவியதில் ஒருவர் பலி: மூவர் காயம்

Gavitha   / 2016 ஜூலை 09 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா,ஒலுமுதீன் கியாஸ்,எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாற்று பிரதேசத்தில், நேற்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற விபத்தின் போது, இளைஞரொருவர் பலியானதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, நாச்சிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்;த எம்.தாஹா பவாஸ் (வயது 21) என்ற நபரே இதன்போது பலியாகியுள்ளார். முகம்மது சாதிக் (21), முகம்மது நிலூபர் (20) மற்றும் எம்.பி.எம்.கியாஸ் வயது (21) ஆகிய மூவரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நான்கு நண்பர்களும் ஒன்று சேர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில், குச்சவெளி பிரதேசத்தை நோக்கி வேகமாகச் சென்றுள்ளனர். இதன்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றோடு ஒன்று கொளுவுபட்டதன் விளைவாக, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .