2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞர்கள் பலி

Princiya Dixci   / 2016 மே 21 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, வடமலை ராஜ்குமார், தீசான் அஹமட்

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பிற்கு சீமெந்து ஏற்றுச்சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி வித்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள், தோப்பூர் - பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த வீ.கிருபாகரன் (வயது 24) மற்றும் தெஹிவத்த கங்குவேலி -புளியடிச்சோலையைச் சேர்ந்த கே.கிருஷ்னகுமார் (வயது 22) என்ற இளைஞர்கள் எனப் பொலிஸர் தெரிவித்தனர்.

சடலங்கள், சேருநுவர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. 

சீமெந்து ஏற்றிச்சென்ற லொறியின் சாரதியான விநாயகபுரத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த சேருநுவரப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .