2021 மார்ச் 04, வியாழக்கிழமை

காளான் வளர்ப்பு பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின்  வாழ்வாதாரப் பிரிவினரால் மூதூர் மற்றும் பட்டணமும் சூழலும் பிரதேசத்தைச் சேர்ந்த 22 அங்கத்தவர்களுக்கு கூடத்தில் காளான் வளர்ப்பு மற்றும் அதன் சந்தைப்படுத்தல் தொடர்பான இரு நாள் பயிற்சிநெறி இடம்பெற்றது.

இப்பயிற்சிநெறிக்கு வளவாளராக  அம்பாறை மாவட்ட விவசாய விரிவுரையாளர் திரு.சசிதரன் கலந்து கொண்டார். இப்பயிற்சி நெறியிலே காளான் கறி சமைத்தல் மற்றும் காளான் உற்பத்தியின் செய்முறை விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு வாழ்வாதாரத் திட்ட இணைப்பாளர் திரு.பொஸ்கோ மற்றும் உத்தியோகத்தர்களான ஜெயராணி, திருமதி. ர.சர்வலெட்சுமி, திருமதி. மோகனரதி மற்றும் கிரிதரன் ஆகியோரும் பங்குகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .