2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா பிரதேச செயலகத்தின் சாகித்திய விழா

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகம் நடத்திய சாகித்திய விழா நேற்று திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கவிதை துறையில் சிறப்பு காட்டிய கவிஞர் ச.கௌரிதாசனுக்கு 'கவிநிலா' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவருடன் ஊடகத்துறைக்கு ஏ.ஜே.எம்.நியாஸுக்கு 'சத்தியகுரல்' என்னும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சாகித்திய விழாவில் கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டதுடன் 'சாகரம்' என்னும் நினைவு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--