2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆசிரியர்களின் சுயவிபர கோவைகளை பூரணப்படுத்தும் வேலைத் திட்டம்

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை வலயக் கல்வி அலவலகம் ஆசிரியர்களின் சுயவிபர கோவைகளை பூரணப்படுத்தும் வேலைத் திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

பல வருடகாலமாக சேவையாற்றும் ஆசிரியர்களது சுய விபர கோவைகளில் பல குறைபாடுகள் உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியம்  இலக்கம் பெற்றுக் கொள்ளாதவர்கள், ஆசிரியர் பதிவு இலக்கம் பெறாதவர்கள், சேவை உறுதிப்படுத்தல் கடிதம்பெறாதவர்கள், கிழக்கு மாகாண சேவைக்கு உள்ளீர்பு செய்ப்படாதவர்கள் தமது விண்ணப்பங்களை பூரணப்படுத்தி எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக திருகோணமலை வலயக் கல்வி அலவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிவித்தல் சகல பாடசாலை அதிபர்களுக்கும் கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X