2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

திருகோணேஸ்வரர் ஆலய வருடாந்தக் கூட்டம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

தலைவர் பரஞ்சோதி பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுச்சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். திருகோணமலை  மூத்த சமூக சேவையாளரும்  ஆன்மீகவாதியுமான காந்திசேவா மன்றத் தலைவர் பொ.கந்தையா  சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார். இவருடைய சேவையை கௌரவிக்கும் முகமாக பரிபாலனசபைத்  தலைவர் ப.பரமேஸ்வரன்  காந்திக்கு  பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

திருகோணமலையிலுள்ள இந்து ஆலயங்களை ஒன்றிணைத்து ஒரு ஒன்றியம் அமைத்து அதன் கீழ் ஆலயங்களைச் செயற்பட வைத்தல், இந்துக்களுக்காக முதியோர் இல்லம் அமைத்து அதில் அவர்களைப் பாரமரித்தல் என்பன இக்கூட்டத்தில் சபையோரால் முன்மொழியப்பட்டு அதனை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--