2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

சிசுவை கட்டிலில் விட்டுவிட்டு தாய் தலைமறைவு

Super User   / 2012 நவம்பர் 21 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


தான் பெற்றெடுத்த சிசுவை கட்டிலேயே விட்டுவிட்டு தாயொருவர் தலைமறைவான சம்பவமொன்று கிண்ணியா தள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இரண்டே இரண்டு நாளான சிசுவையே இவ்வாறு விட்டுவிட்டு அந்த தாய் தலைமறைவாகியுள்ளார.

இந்த சம்பவம் இன்று புதன் கிழமை பகல் ஒரு மணியளவில் இடம் பெற்றுள்ளதாக கிண்ணியா தள வைத்திய அதிகாரி தெரிவித்தார்.குறித்த பெண் பிரசவ வாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு கிண்ணியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்படடுள்ளார் இவருக்கு  நேற்றிரவு 9.00 மணியளவில் குழந்தை கிடைத்துள்ளது.

இவரை இன்று வீட்டு அனுப்புவதற்கு தீர்மானித்திருந்த வேளையிலேயே கடமை நிமித்தம் தாதிகள் மாற்றலாகும் நேரம் பார்த்து பகல் 1.00 மணியளவில் சிசுவை  கட்டிலேயே வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்படும் போது போலியான முகவரியை வழங்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த கிண்ணியா பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

 • Mohamed Thursday, 22 November 2012 11:58 AM

  இது சம்பந்தமானவர்களிடம் ஒரு வேண்டுகோள். யாரும் உரிமை கோராத பட்சத்தில் நான் இந்த பிள்ளையை தத்து எடுக்க விரும்புகிறேன். முடிந்தால் உதவி செய்யவும். தயவு செய்து அனாதை இல்லதில் சேர்த்துவிட வேண்டாம். நானும் இதே மாவட்டதில் வசிப்பவன்.

  Reply : 0       0

  fowmy Friday, 23 November 2012 08:38 AM

  இந்த பிள்ளையை தத்தெடுக்க விரும்புகிறேன்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .