2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மூடை நெல்லுக்கான நிறை குறைப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 24 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்  

கந்தளாய் பாரிய நீர்ப்பாசன திட்டத்திற்குட்பட்ட கிண்ணியா, தம்பலாகமம், கந்தளாய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நெல் கொள்வனவு செய்வதில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஒரு மூடை நெல்லுக்கான அங்கிகரிக்கப்பட்ட நிறையானது 68 கிலோ கிராமிலிருந்து 64 கிலோகிராமாக  குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிரதேச விவசாய வதிவிட திட்ட முகாமையாளர் பு.சுனில் தெரிவித்தார்.

நாட்டின் அநேகமான பகுதிகளில் நெல்மூடை ஒன்றுக்கான நிறை 64 கிலோ கிராமாக இருந்தும் கூட, கந்தளாய் பாரிய நீர்ப்பாசன திட்டத்துக்குட்பட்ட பிரதேசங்களில் 68 கிலோ கிராமாகவே இவ்வளவு காலம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கந்தளாய் பிரதேச அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் உடன்பாடு இந்த நிறை குறைப்பு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவியாக அமைந்துள்ளது.

எனவே, எதிர்வரும் பெரும்போக அறுவடையில் இருந்து நெல்மூடை ஒன்றுக்கான நிறை 64 கிலோ கிராமாகக் குறைக்கப்படும். விவசாயிகளுக்கு நெல் சந்தைப்படுத்தல் நடவடிக்கையில் ஏதும் பிரச்சினைகள் ஏற்படின் கந்தளாய் விவசாய வதிவிட திட்ட முகாமையாளர் காரியாலயத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .