2020 ஜூலை 11, சனிக்கிழமை

அலைபேசிகள் கொள்ளை; மூவர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை நகரில் அலைபேசிக் கடையொன்றின் கூரையை உடைத்து, அங்கிருந்த அலைபேசிகளைத் திருடிய குற்றச்சாட்டில், மூவர், நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளனரென, தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 22 வயதுடையவரும் காத்தான்குடியைச் சேர்ந்த  33 வயதுடையவரும், அம்பாறையைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவருமே் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாதம் 24ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில், சி.சி.டி.வி கமெரா மூலம் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் சந்தேக நபர்களைத் தங்களால் கைது செய்ய முடிந்ததாக தலைமையகப் பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த 18 அலைபேசிகளில் 12 அலைபேசிகளை, கொழும்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளமையை அறிந்து அவற்றையும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .