2020 ஓகஸ்ட் 15, சனிக்கிழமை

கிண்ணியாவில் படகு கவிழ்ந்து ஒருவர் பலி: இருவர் மீட்பு

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா, உப்பாறு ஆற்றில்  ஐந்து பேர் பயணித்த  படகு கவிழ்ந்து இன்று (8) காலை விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், விபத்துக்குள்ளானவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட இருவர், கிண்ணியா தள வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருகோணமலை புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இவர் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதுவதற்காக கிண்ணியாவுக்கு வந்து உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவரது சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

விபத்தில் காணாமல் போன இருவரை, கடற்படையினரும் பிரதேச மீனவர்களும் இணைந்து தேடி வருகின்றனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது ,

சிறிய படகு ஒன்றில் உப்பாறு ஆற்றினூடாக  நேற்று (7) மாலை  கிண்ணியா கண்டல் காடு பிரதேசத்தில் அமைந்துள்ள வயல்களுக்கு யானைக்காவலுக்கு சென்று, இன்று (8) காலை 7.30 மணியளவில் அதே ஆற்றினூடாக திரும்பி வரும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது.

இன்று காலை காட்டு வெள்ளம் அதிகரித்திருப்பதால் நீரோட்டமும் அதிகரித்திருக்கிறது. இவர்கள் பயணித்த படகு நீரோட்டத்தில்  சிக்குண்ட  கவிழ்ந்து, ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-அப்துல் சலாம் யாசீம்ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--