Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(v];.v];.Fkhu;)
எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் நவரெட்ணபுரம் வீரமா நகரில் 40 நிரந்தர வீடுகள் முன்னெடுக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டு இந்நிரந்தர வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்றுக் காலை 9.30 மணியளவில் நவரெட்ணபுரம் வீரமா நகர் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வணபிதா ஜோர்ஜ் சிகாமணி (தேசிய பணிப்பாளர் கரித்தாஸ் இலங்கை செடெக்), மேலதிக அரசாங்க அதிபர் திரு.நடராஜா, மூதூர் பிரதேச செயலாளர் திரு.என்.செல்வநாயகம், மூதூர் பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் திரு.பொன்னுத்துரை, ஆர்.டி.எஸ் தலைவர் (நவரெட்ணபுரம் மூதூர்), நவரெட்ணபுர கிராம அலுவலர் திரு.செல்வரெட்ணம் பாட்டாலிபுர கடற்படை முகாமின் பொது தொடர்பாடல் அதிகாரி இவர்களுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் பணிப்பாளர் வணபிதா பிரான்சிஸ் சேவியர் டயஸ், திட்ட முகாமையாளர் திரு.ஜி.ஏ.பிரான்சிஸ், திட்ட உத்தியோகத்தர் திரு.பே.மரியநாயகம் மற்றும் எகெட் கரித்தாஸ் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படுவதையும், வீடுகள் திறந்து வைப்பதையும் படத்தில் காணலாம்.

38 minute ago
50 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
50 minute ago
1 hours ago
5 hours ago