2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மூதார் கரையோர கிராமங்கள் தீவிர கடலரிப்பினால் அழிவிற்குள்ளாவதை தடுக்க கோரிக்கை

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதார் கரையோர கிராமங்கள் தீவிர கடலரிப்பினால் அழிவிற்குள்ளாவதை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மூன்று முக்கிய அமைச்சர்களிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மூதூர் கரையோர கிராமங்களை சேர்ந்த மீனவர் கூட்டுறவு சங்கங்களோடு தக்வா நகர் கரையோர சமுதாய அபிவிருத்தி ஒன்றியமும் இணைந்து  கடலரிப்பை தடுப்பது சம்பந்தமான கோரிக்கை அடங்கிய அவசர மகஜரை கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுற்றாடல் அமைச்சர்  அநுர பிரிய தர்ஷன யாப்பா மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ளன. 

கரையோர மக்கள் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மூதூர் பிரதேசத்திலுள்ள கரையோரக் கிராமங்களான  ஹபீப் நகர், தக்வா நகர் மற்றும் பஹ்ரியா நகர் ஆகிய கிராமங்கள் தீவிரமான கடலரிப்பால் அழிவிற்குள்ளாகி வருகின்றன.

ஒரு வருடத்திற்கு சுமார் மூன்று கிலோ மீற்றருக்கு மேற்பட்ட கரையோரத்தில் குறுக்காக 10 மீற்றக்கும்  அதிகமான நிலப்பகுதி     கடலரிப்பால்  அழிவடைந்து வருகிறது.

இத்தீவர கடலரிப்பை உடனடியாக தடுக்காத பட்சத்தில் இன்னும் சில ஆண்டுகளில்  இக்கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிடும் அபாயம் உள்ளது.

இதனால் இப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கானோரின் எதிர்காலம்  கேள்விக்குறியாகிவிடும்.

எனவே, இக்கிராமங்களை தீவிர கடலரிப்பிலிருந்து தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி வாழ் மக்களின் சார்பாக கோருகின்றோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X