2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உதவ முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்,முறாசில்,
எம்.பரீத்)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கையை கிழக்கு மகாணத்தின் முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அரசசார்பற்ற நிறுவனங்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

முதலமைச்சர் அலுவலக  கேட்போர் கூடத்தில் அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மகாணத்தில் 3 மாவட்டங்களும் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக  திருகோணமலை  மாவட்டத்துக்கு அவசர நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும் முகமாகவே முதலமைச்சர் கலந்துரையாடல்களை நடத்தினார்.

இதன்போது வெள்ளப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும்;  யுத்தம் காரணமாக  இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள சம்பூர் மக்களுக்கும் உதவியளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரினார்.

வெள்ள பாதிப்பு  பற்றிய தகவல்களை பிரதேச  செயலாளர்களிடமிருந்து கோரி அதனடிப்படையில் உதவியளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .