George / 2017 ஜூன் 12 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது இராஜினாமாக் கடிதத்தை, கட்சித் தலைமையிடம் இன்றுக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில், தான் அப்பதவியை இராஜினாமா செய்யப்போவதாக, அவரது இராஜினாமாக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவிக்கின்றது.
வடமாகாண அமைச்சர்களான தம்பிராஜா குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை, வடமாகாண சபையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பான விவாதம், நாளை மறுதினம் புதன்கிழமை (14) இடம்பெறவுள்ள நிலையிலேயே, குருகுலராசா, தனது பதவியைத் தற்காலிகமாக இராஜினாமா செய்துள்ளார்.
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025