2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

சஜித் தலைமையில் பரந்துபட்ட கூட்டணி

Editorial   / 2020 ஜனவரி 17 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தலைமையில், பரந்துபட்ட கூட்டணியொன்று அமைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து கட்சிகளும் இடம்பெறும் என்பதுடன், புதிய கட்சிகளும் உள்வாங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் வலைத்தளத்திலேயே முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற  ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தின் பின்னரே முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .