2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வனவிலங்குகளோடு பழகும் அரிய சந்தர்ப்பம்!

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலை விடுமுறை என்பதால் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கின்றன. காட்டு விலங்குகள் மீது மக்களுக்கிருக்கின்ற பயத்தினைப் போக்குமுகமாக அந்த விலங்குகளுடன் அருகிலிருந்து பழகும் சந்தர்ப்பத்தினை மிருகக்காட்சிசாலை நிர்வாகத்தினர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர்.

தினமும் மாலை 2 மணி தொடக்கம் 3 மணிவரை இந்த வனவிலங்குகளுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியிருக்கின்றனர். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அந்த விலங்குகளுடன் நெருங்கிப் பழகமுடியும். அதுமட்டுமல்லாமல் வனவிலங்குகளின்மீது பற்றினை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கையாகவும் இது அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. Pix : Samantha Perera


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X