Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்த காலத்தின் போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, இன்னும் சொல்லப்போனால் தமது சொந்தங்களையே பறிகொடுத்துவிட்டு அரசாங்கத்தினால் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட முகாம்களை நோக்கிப் பயணித்தனர்.
அவ்வாறு தங்களது உயிருக்கு பாதுகாப்பு தேடிப் புறப்பட்ட மக்கள் தற்போது பகுதி பகுதியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட்டு வருகின்றனர். இருப்பினும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிய அவர்களுக்கு மிஞ்சியதோ அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களும் உதவித் தொகையான குறிப்பிட்டளவு பணமுமேயாகும்.
இவ்வாறாக தங்களது வாழ்க்கைத் தடங்களைத் தேடிப் பயணிக்கும் எமது சொந்த பந்தங்களுக்கு தற்போது அவர்களால் விட்டுச் செல்லப்பட்ட சொத்துக்கள் படிப்படியாக வழங்கப்பட்டு வருவதென்பதோ உண்மைதான். ஆனால், யுத்தத்தின் போது தமது உறவுகளைப் பறிகொடுத்த அவர்களின் இழப்புக்கு யார் தான் மருந்தளிப்பது?
இந்நிலையில், கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களால் விட்டுச் செல்லப்பட்ட வாகனங்களை மீளக் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தங்களது வாகனங்களை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களுடன் வருகை தரும் மக்கள் என்னவோ அவற்றைத் தேடிக் கண்டுபிடித்துக்கொண்டு செல்கின்றனர்.
ஆனால் தடுப்பு முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சொந்தங்களையும் உயிரோடு இருக்கிறார்களா இல்லை இறையடி சேர்ந்தார்களா என்றே தெரியாது தவிக்கும் அப்பாவி மக்கள் அவர்களின் சொந்தங்களை தேடிக் கண்டுபிடிக்க சந்தர்ப்பம் கிட்டுமா? என்பது கேள்விக்குறியதே. Pix by :- Samantha Perera
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
7 hours ago