2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நினைவை பகிரும் தலைமைகள்

Super User   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 20 ஆண்டு நிறைவையொட்டி அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி மற்றும் எருக்கலம்பிட்டி மறுமலர்ச்சி ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஞாபாகர்த்த நிகழ்வு நேற்று மாலை கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஈரானிய தூதுவர் மஹ்மூத் ரஹீம் ஜோர்ஜியும் விசேட அதிதிகளாக அமைச்சர் றிசாட் பதியுதீன், நடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், நூர்தீன் மசூர், மேல் மாகாண  ஆளுநர் அலவி  மெளலானா, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நெருக்கடிக்கு மத்தியில் க.பொ.த உயர் தரம், சாதாரண தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சாதனை நிலைநாட்டிய வட மாகாண முஸ்லிம் மாணவர்கள் இந்நிகழ்வில் பாராட்டி கெளரவிக்கப்படமையும் குறிப்பிடத்தக்கது. (Pic By: Waruna Waniyarachi)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X