Menaka Mookandi / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 5,000 ரூபா பெறுமதியான நாணயக் குற்றியொன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த நாணயக் குற்றியை உத்தியோகபூர்வமாக கையளித்து வெளியிட்டு வைத்தார்.
பல நிறங்களைக் கொண்ட வகையில் அச்சிடப்படவுள்ள மேற்படி நாணயக் குற்றியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் ஆலமரம் ஒன்றின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அதன் பெறுமதி குறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix by :- AFP

32 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
2 hours ago