Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2011 ஜனவரி 16 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மலேசியாவின் மலாக்கா மாநில முதலமைச்சர் முஹம்மட் அலி பின் முஹம்மட் ருஸ்தான் இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் மலேசியா நாட்டு மலாக்கா மாநில முதலமைச்சர் முஹம்மட் அலி பின் முஹம்மட் ருஸ்தான், இலங்கைக்கான மலேசியா உயர் ஸ்தானிகர் றொஸ்லி இஸ்மாயில் மற்றும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் மஹ்மூத் ரஹ்மி ஜேர்ஜி ஆகியோர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் இடங்களையும் பார்வையிட்டனர்.
இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல் மற்றும் ஏ.எம். மஜீட் உட்பட பலர் தூதுக்குழுவுடன் விஜயம் செய்தனர்.
Abdul Monday, 17 January 2011 01:35 AM
வளங்கப்படும; உதவிஹல் முஸ்லிம் காங்கிரஸ் asamihalal sooraiyadappadum
Reply : 0 0
Amjath ULM Sunday, 23 January 2011 09:36 PM
அதற்கு ஒன்றும் அவர்கள் இல்லை இவர்கள். இது தலைவர் ஹக்கீமின் முயற்சி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago