2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

யாழ்பாணத்தில் ஜனாதிபதி...

Super User   / 2011 ஜனவரி 16 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மக்களுக்கு பொங்கல் பரிசாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  கேரதீவு - சங்குப்பிட்டி பாலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்துவைத்தார்.

விசேட விமானம் மூலம்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் பலாலி விமான நிலையத்தை பிற்பகல் வேளையில்  வந்தடைந்தனர்
 
யாழ். வருகை தந்த ஜனாதிபதியை சர்வ மத தலைவர்கள் ஆசி வழங்கி தமிழ் பாரம்பரியங்களுடன் வரவேற்றனர்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, ஈ.பி.டி.பி நாடளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சி.அலன்ரின், யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார், யாழ் .மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் யாழ். மாவட்ட இராணுவ தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் ஜனாதிபதியை பலாலி விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.

288 மீற்றர் நீளம் கொண்ட இந்த இரு வழி பாலம் எட்டு மாதங்களுக்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கேரதீவு - சங்குப்பிட்டி பால திறப்பு விழாவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Pix By: Sudath Silva


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--