2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

அவுஸ்திரேலிய கிரான்ட் பீறிக்ஸை வென்றார் றொஸ்பேர்க்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 20 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்லறென் அணியின் ஸ்பெயின் நாட்டு சாரதியான பெர்னாண்டோ அலோன்ஸோ பாரிய விபத்துக்குள்ளான அவுஸ்திரேலிய கிரான்ட் பீறிக்ஸை மெர்சீடிஸின் ஜெர்மனிய சாரதியான நிக்கோ றொஸ்பேர்க் வெற்றி கொண்டார்.

இதேவேளை, கடந்தாண்டு போர்மியுலா வன் சாராதியான மெர்சீடிஸ் அணியின் பிரித்தானிய நாட்டுச் சாரதியான லூயிஸ் ஹமில்டன், மோசமான ஆரம்பத்தைப் பெற்று, ஆறாவது இடத்தில் பந்தயத்தை ஆரம்பித்திலிருந்தாலும் இறுதியில் இரண்டாமிடத்தைப் பெற்றார்.

இப்பந்தயத்தின் ஆரம்பத்தில், பெராரி அணியின் ஜெர்மனிய சாரதியான செபஸ்டியான் வெட்டலே முன்னிலையில் இருந்தாலும் தனது நிறுத்துமிடத்தில் மெதுவான டயர்களை மாற்றியதன் காரணமாகவும் அதேநேரத்தில் மத்திய தரத்திலான டயர்களை றொஸ்பேர்க் மாற்றியதன் காரணமாகவும் அவரால் மூன்றமிடத்தையே பெற முடிந்தது.

ரெட்புல் அணியின் அவுஸ்திரேலிய சாரதியான டானியல் ரிக்கியார்டோ நான்காமிடத்தையும் வில்லியம்ஸ் அணியின் பிரேஸில் சாரதியான பிலிப்பி மாஸா ஐந்தாமிடத்தினையும் பெற்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X