Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 மார்ச் 21 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளரும் அதிரடித் துடுப்பாட்ட வீரருமான மொஹமட் ஷஷாத், அதிரடியான துடுப்பாட்டத்துக்கும் ஆக்ரோஷமான நடத்தைக்கும் பெயர் போனவர் ஆவார். தென்னாபிரிக்காவுக்கெதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் 19 பந்துகளில் 44 ஓட்டங்களைக் குவித்த ஷஷாத், தென்னாபிரிக்காவுக்கு அச்சத்தை வழங்கியிருந்தார்.
இப்போட்டியில், உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்னுக்குப் பதிலாக, டேவிட் வியஸே விளையாடியிருந்த நிலையில், போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அது தொடர்பாக ஷஷாத்திடம் கேட்கப்பட்டது. 'டேல் ஸ்டெய்னை எதிர்கொள்வதற்கு நான் விரும்பியிருப்பேன், ஏனெனில், டேல் ஸ்டெய்ன் ஆபத்தானவர் அல்லர்" என அவர் தெரிவித்தார்.
'(கிறிஸ்) மொறிஸ் ஆபத்தானவர், ஏனெனில் அவர் உயரமானவர் என்பதோடு, பந்தை ஸ்விங் செய்யக்கூடியவர். டேல் ஸ்டெய்ன், வேகமாக மாத்திரம் பந்துவீசுபவர். இந்த ஆடுகளத்தில், வேகமான பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது இலகு. டேல் ஸ்டெய்ன் விளையாடாமல் விட்டமை குறித்து நான் கவலையடைந்துள்ளேன்" என்றார்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களைப் பெற, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
27 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
31 minute ago
2 hours ago