Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 ஜூலை 12 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கெதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கான குழாமில், இங்கிலாந்து அணியின் பிரதம வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டுமென, அவ்வணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஸ்டுவேர்ட் ப்ரோட் தெரிவித்துள்ளார்.
முதலாவது டெஸ்ட் போட்டி, நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், அதற்கான 12 பேர் கொண்ட குழாம், கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், காயத்திலிருந்து மீண்டுவரும் ஜேம்ஸ் அன்டர்சனுக்கு இடம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
"13 பேர் கொண்ட குழாமில் அன்டர்சனைச் சேர்ப்பதற்கு நான் முயன்றிருப்பேன். அவ்வாறு இணைத்தால், பந்துவீச்சாளர்களோடு இணைந்து பணிபுரிவதோடு, வியாழக்கிழமை போட்டியில் பங்குபற்றுவதற்காக தனது உடற்றகுதியை நிரூபிக்கும் வாய்ப்பு, அவருக்கு ஏற்பட்டிருக்கும்" என்று, ஸ்டுவேர்ட் ப்ரோட் தெரிவித்தார்.
"கடந்த வாரம் அவரை நான் பார்த்தேன். அவர் ஓரளவு நன்றாக இருந்தார். குழாமில் அவர் இணைக்கப்படுவார் என, அவர் நிச்சயமாக இருந்தார்.அவருக்காக நான் கதைக்க விரும்பவில்லை, ஆனால் குழாமில் சேர்க்கப்படாமை குறித்து, அவர் மிகவும் ஏமாற்றமடைந்திருப்பார்" என ப்ரோட் மேலும் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டுத் தடை விதிக்கப்பட்ட மொஹமட் ஆமிர், தனது தடையிலிருந்து மீண்டு, தனது டெஸ்ட் மீள் அறிமுகத்தை மேற்கொள்ளும் போட்டியாக, லோர்ட்ஸில் ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டி அமையவுள்ள நிலையில், அழுத்தமிகுந்த போட்டியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago