2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

இந்தியா செல்ல பாகிஸ்தான் அணிகளுக்கு அனுமதி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 12 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடருக்காக இந்தியா செல்ல, பாகிஸ்தானின் ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்கும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. பாக்கிஸ்தானின் ஆண்கள் அணி, இந்தியாவுக்கெதிரான போட்டியில் எதிர்வரும் 19ஆம் திகதி கொல்கத்தாவில் பங்குபற்றும்போது அங்கிருக்கும் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என மேற்கு வங்க அரசாங்கமும் கொல்கத்தா பொலிஸ் ஆணையாளர் ரஜீவ் குமார் உறுதி வழங்கிய கடிதங்கள் கிடைக்கப் பெற்றதையடுத்தே மேற்படி முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்  கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுச் சபையின் தலைவர் நஜாம் சேதி, பாகிஸ்தானின் உட்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் கானை நேற்று சந்தித்த பின்னரே, இந்திய உள்விவகார அமைச்சிலிருந்து உறுதிமொழியை பாகிஸ்தான் அரசாங்கம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கெனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறை காணப்படுகின்றது என்பதற்காக, இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியானது தரம்சாலாவிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டிருந்தது.

அதன்படி, பாகிஸ்தானின் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் இன்று இந்தியாவைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--