2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

இலங்கைக் குழாமில் யாழ். வீரர் மதுசன்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் யாழ். மத்திய கல்லூரியின் செல்வராசா மதுசன் இடம்பெற்றுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கையின் பயிற்சிக் குழுவில் இடம்பெற்றிருந்த மதுசன், உடற்றகுதிச் சோதனையில் தோல்வியடைந்தமை காரணமாகவே அப்போது குழாமில் சேர்க்கப்படவில்லை என்றும் பின்னர் உடற்றகுதிச் சோதனையில் வெற்றி கண்டார் என்றும் கூறப்பட்ட நிலையிலேயே தற்போது குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த், ஆசியக் கிண்ணத் தொடருக்கான தயார் நிலை வீரர்களில் காணப்படுகின்றார்.

குழாம்: செல்வராசா மதுசன், நிபுன் தனஞ்சய (அணித்தலைவர்), பசிந்து சூரியபண்டார, நவோத் பரணவிதான, கமில் மிஷர, நிஷான் மதுஷ்க, டுனித் வெல்லலகே, சசிக டுல்ஷான், கல்ஹர சேனாரத்ன, றொஷான் சஞ்சய, சதுன் மென்டிஸ், கலன பெரேரா, நிபுன் மலிங்க, நவீன் பெர்ணான்டோ.

தயார்நிலை: விஜயகாந்த் வியாஸ்காந்த், லக்ஷித மடரசிங்கே, முடித லக்‌ஷன், சிலான் கலிந்து, சாமிக குணசேகர.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X