2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்குப் பணிந்ததா ஐ.சி.சி?

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 26 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை டெஸ்ட் அணிக்கு வழங்கப்படும் விசேட கோலை வழங்கும் நிகழ்வு, தனிப்பட்ட நிகழ்வாக இடம்பெற்றமைக்கு, இலங்கை கிரிக்கெட் சபையின் கோரிக்கையே காரணம் எனத் தெரியவருகிறது.

வழக்கமாக இந்த நிகழ்வு, வழக்கமாகப் பகிரங்கமாக இடம்பெறும் ஒன்றாகும். முதலிடத்துக்கான கோலைப் பெற்றுக் கொள்ளும் அணிகள், மிகப்பெரிய கௌரவமாக இந்நிகழ்வைக் கருதும். ஊடகங்களும் அதைப் பெரியளவில் முக்கியத்துவம் வழங்கி அறிக்கையிடும்.

ஆனால் இம்முறை, ஹொட்டலொன்றில், மூடிய நிகழ்வாகவே இது இடம்பெற்றது. பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இலங்கை வீரர்களின் மனோதிடத்துக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால், இந்நிகழ்வை முக்கியத்துவமற்ற நிகழ்வாக மாற்றுமாறு, இலங்கை கிரிக்கெட் சபை கோரியிருந்ததாக அறிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X