Shanmugan Murugavel / 2016 ஜூலை 17 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் 8ஆம் நிலை டென்னிஸ் வீரரான செக் குடியரசைச் சேர்ந்த தோமஸ் பேர்டிச், இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள றியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சீகா வைரஸ் தொடர்பான அச்சத்திலேயே அவர் ஒலிம்பிக்கிலிருந்து விலகியுள்ளார்.
30 வயதான பேர்டிச், சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த விம்பிள்டன் போட்டிகளில் அரையிறுதிவரை முன்னேறியிருந்ததோடு, அத்தொடரில் பின்னர் சம்பியனாகிய அன்டி மரேயிடம் அரையிறுதியில் வைத்துத் தோல்வியடைந்திருந்தார்.
"எனக்கு நெருக்கமானவர்களுடன் நீண்டதும் வலி தரக்கூடியதுமான கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னர் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம், மிகவும் கடினமான முடிவாகும்" என, பேர்டிச் தெரிவித்தார்.
முன்னணி வீராங்கனையான சிமோனா ஹலெப், விம்பிள்டனில் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் கனடாவின் மிலோஸ் றானிச் ஆகியோரை அடுத்தே, தற்போது தோமஸ் பேர்டிச்சும் பதவி விலகியுள்ளார்.
இது தனது தனிப்பட்ட முடிவு எனத் தெரிவித்த அவர், ஒலிம்பிக் இடம்பெறவுள்ள நாட்டில் சீகா வைரஸ் பரவியுள்ளதோடு, மிக அண்மையிலேயே குடும்பமொன்றை ஸ்தாபித்துள்ள தான், அங்கு செல்வதற்கு விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே, கோல்ப் வீரர்களில் 20க்கும் மேற்பட்டோர், றியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago