2021 மார்ச் 04, வியாழக்கிழமை

குக்குக்கு 10,000; அன்டர்சனுக்கு 450

Gopikrishna Kanagalingam   / 2016 மே 31 , மு.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்டெயர் குக், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதலாவது இங்கிலாந்து வீரராக, நேற்றுத் தன்னை வரலாற்றில் பதிந்துகொண்டார்.

இலங்கைக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று, இங்கிலாந்தின் இரண்டாவது இனிங்ஸில் அவர் 5 ஓட்டங்களைப் பெற்றபோதே, இந்த மைல்கல்லை அடைந்தார்.

இந்த மைல்கல்லை அடைந்த இளைய வீரர் குக் என்பதோடு, மொத்தமாக 12ஆவது வீரராவார். 

இலங்கையின் குமார் சங்கக்கார, இந்தியாவின் சச்சின் டென்டுல்கர், மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா ஆகியோர், 195 இனிங்ஸ்களில் இந்த மைல்கல்லை அடைந்து, முதலிடத்தைப் பகிர்ந்துள்ள நிலையில், தனது 229ஆவது இனிங்ஸில் இதை அடைந்த அவர், மெதுவான நான்காவது வீரராவார்.

இதேவேளை, இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன், 450 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 6ஆவது வீரராகத் தனது பெயரைப் பதிந்துகொண்டார். இலங்கைக்கெதிராக இரண்டாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், 4ஆவது விக்கெட்டைக் கைப்பற்றும்போதே, இந்த மைல்கல்லை அடைந்தார்.

115 போட்டிகளில் இந்த மைல்கல்லை அடைந்த அவர், இதை மெதுவாக அடைந்த 2ஆவது வீரராவார்.
ஏற்கெனவே இப்போட்டியில் ரங்கன ஹேரத், தனது 300ஆவது விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .