2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சுவிட்ஸ்லாந்தின் சாதனையுடன் சிலிக்கு வெற்றி

Super User   / 2010 ஜூன் 22 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சிலி  அணி 10 வீரர்களுடன் விளையாடி சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்று வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

பின்களத்தில் மட்டும் 6 சுவிட்சர்லாந்து வீரர்கள் அரண் அமைத்திருந்தனர். இந்த போட்டியில் 65ஆவது நிமிடத்தில் உலகக் கிண்ண வரலாற்றில் சுவிட்சர்லாந்து புதிய சாதனை படைத்தது.

இதற்கு முன் கடந்த 1986 முதல் 1990ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் இத்தாலி 550 நிமிடங்கள் வரை எதிர் அணியிடம் கோல் வாங்காமல் சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை சுவிட்சர்லாந்து இன்று முறியடித்தது. சாதனை முறியடிக்கப்பட்ட 9ஆவது நிமிடத்தில் சிலி ஒரு கோல் போட்டது.

2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை, உலகக் கிண்ணத்தில் 559 நிமிடங்கள் எதிர் அணியை எதிர் அணி கோல் அடிக்க விடாமல் செய்த அணி என்ற புதிய சாதனையை சுவிட்சர்லாந்து படைத்தது.

இறுதியில், சிலி 1-0 என்று முன்னிலை பெற்றது. போட்டி நேர இறுதி வரை,சுவிட்சர்லாந்து வீரர்களால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--