Shanmugan Murugavel / 2016 ஜூலை 11 , மு.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவைச் சேர்ந்த போர்மியூலா வண் சாரதியான லூயிஸ் ஹமில்டன், பிரிட்டிஷ் கிரான்ட் பிறிக்ஸ் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் வென்றதோடு, தனக்கும் நிக்கோ றொஸ்பேர்குக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை ஒன்றாகக் குறைத்துக் கொண்டார்.
இம்முறை கிரான்ட் பிறிக்ஸ் போட்டிகளில் சிறப்பான ஆரம்பத்தைப் பெறாமல் பின்தங்கிவந்த ஹமில்ட்டன், அண்மைக்காலமாகவே முன்னேற்றத்தைப் பெற்றுவருகிறார். கிரான்ட் பிறிக்ஸில் முதல் நான்கு போட்டிகளையும் வென்றிருந்த றொஸ்பேர்க், அதன் பின்னர் ஹமில்டனின் முன்னேற்றத்தால் தடுமாறியுள்ளார்.
இந்தப் போட்டியில் றொஸ்பேர்க், இரண்டாமிடத்தைப் பெற்றதாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், விதிமுறைகளுக்கு மாறாக, தனது அணியின் உதவியை தொலைதூரத் தொடர்பாடல் கருவிகள் மூலம் பெற்றமையால், 10 செக்கன்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், மூன்றாவது இடத்துக்கு அவர் தள்ளப்பட்டார்.
இந்தத் தோல்விக்கு மத்தியிலும், புள்ளிகளின் பட்டியலில் முதலாவது இடத்தில் றொஸ்பேர்க்கே தொடர்ந்தும் உள்ள போதிலும், இரண்டாவது இடத்திலுள்ள ஹமில்டன், அவரை விட ஒரு புள்ளி மாத்திரமே குறைவாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
18 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
23 minute ago