2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

டெஸ்ட் போட்டியிலிருந்து அப்ரிடி விலகக்கூடாது- பாகிஸ்தான் அணியின் முகாமையாளர் சமரசம்

Super User   / 2010 மே 24 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரிடி டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகக்கூடாது என்று அந்த அணியின் முகாமையாளரான யவர் சயீத், அப்ரிடியுடனான சமரச பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றார்.

2006ஆம் ஆண்டிலிருந்தே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்த்து வந்த அப்ரிடி, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார்.  இன்னும் ஓரிரு தினங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் இஜால் பட்டை சந்தித்து தனது முடிவினை அறிவிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையிலேயே அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகக்கூடாது என்று அந்த அணியின் முகாமையாளரான யவர் சயீத், அப்ரிடியுடனான சமரச பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றார்.

அத்துடன் அப்ரிடி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சில ஆண்டுகள் நீடிக்க வெண்டும் எனவும், போட்டிகளிலிருந்து விலகுவதற்கு இது உகந்த தருணம் இல்லை என்றும் குறித்த முகாமையாளர் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--