2021 மே 12, புதன்கிழமை

துன்புறுத்தல் வழக்கில் ஷகாதத் ஹொசைன் கைது

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் டாக்கா நீதிமன்றில் இன்று சரணடைந்து பிணை கோரிய பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளர் ஷகாதத் ஹொசைன், சிறைக்கு அனுப்பப்ட்டுள்ளார். டாக்காவில் உள்ள ஷகாதத் ஹொசைனின் மனைவியினது உறவினர்களின் வீடொன்றில் இருந்து அவரது மனைவி கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்தே இவரது கைது இடம்பெற்றிருக்கிறது.

மாநகர நீதவான் நீதிமன்ற நீதவான் மொஹமட் யூசுஃப் ஹொசைனிடம்  இன்று காலை ஷகாதத் ஹொசைன் பிணை மனுவை கையளித்திருந்தார். நீதிமன்றம் பொலிஸாரை எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி அறிக்கையளிக்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடக்குமுறை தடுப்புச் சட்டத்தின் கீழேயே ஷகாதத் ஹொசைன் மற்றும் அவரது மனைவியின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

தனது வீட்டுப் பணிப்பெண் காணவில்லையெனத் ஷகாதத் ஹொசைன் செப்டெம்பர் 6ஆம் திகதி மிர்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அன்றிரவே 11வயதுப் பெண்,  உள்ளூர் ஊடகவியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டு மிர்பூர் பொலிஸ் நிலையத்தில் கையளிக்கபட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதற்கு அடுத்த நாள் முதல் இன்று சரணடையும் வரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் ஷகாதத் இருந்திருந்தார். இந்த்நிலையில் வழக்கில் ஒரு தீர்வு எட்டப்படும் வரை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஷடாட்டை இடை நிறுத்துவதாக செப்டெம்பர் 13ஆம் திகதி அறிவித்திருந்தது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .