2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

நாங்க முதல்ல வெளுக்கணும்.. அப்பத்தான் சிறப்பா இருக்கும்..

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனியர்கள் முதலில் சிறப்பாக விளையாடினால்தான் ஜூனியர் வீரர்களுக்கு அது உத்வேகமாக இருக்கும் என தென்னாப்பிரிக்க அணித்தலைவர் குவின்டன் டி காக் கூறியுள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தரம்சலாவில் இன்று தொடங்குகிறது. 

பகலிரவு போட்டியாக இது நடைபெறுகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகளில் இது முதல் போட்டியாகும். 

இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் தரம்சலா வந்து விட்டன. இப்போட்டியில் வெல்ல இரு அணிகளுமே பெரும் கவனமுடன் உள்ளன. 
ஒருபக்கம் கொரோனா மிரட்டல் இருந்தாலும் கூட ரசிகர்களும் சரி, வீரர்களும் சரி போட்டிக்காக ஆர்வத்துடன் தயாராகி காத்துள்ளனர். 

இந்த நிலையில் போட்டி குறித்து தென்னாப்பிரிக்க அணித்தலைவர் டிகாக் கூறுகையில், " பாப் டு பிளஸ்சி அணிக்குத் திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் அவர் விளையாடவில்லை. 

இப்போட்டித் தொடரில் பாப் டு பிளஸ்ஸியின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இளம் வீரர்களுக்கு அவர் சிறப்பாக வழி காட்டுவார் என எதிர்பார்க்கிறோம். 

அவரது வருகையும், இருப்பும் எங்களுக்கு மிகப் பெரிய பலம். சீனியர்கள் அனுபவம் கை கொடுக்கும் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி அவர் அணிக்கே முன்னுதாரணமாக இருப்பார். 

அவரது ஆலோசனைகளை கேட்டு விளையாட இளம் வீரர்களும் ஆவலுடன் உள்ளனர். இந்தத் தொடர் முழுவதும் பாப் டு பிளஸ்ஸியின் வான வேடிக்கைக்கு குறைவு இருக்காது. 

அணியில் பல வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள்தான். இருப்பினும் எங்களிடம் நிறைய நம்பிக்கை இருக்கிறது.

 பாப் டு பிளஸ்ஸி, நான், டேவிட் மில்லர் போன்ற சீனியர்கள் உள்ளோம். அவர்கள் சிறப்பாக விளையாடினாலே அதிலிருந்து இளம் வீரர்கள் பிக்கப் செய்து கொள்வார்கல். எனவே நாங்கள் சிறப்பாக ஆட வேண்டியது முக்கியம். 

எங்களது அனுபவத்தையும், பக்குவத்தையும் இளம் வீரர்களுக்கு நாங்கள் பாஸ் செய்தாக வேண்டும். தன்னம்பிக்கை அதிகம் இருக்கு ஆஸ்திரேலியாவை மிகச் சிறப்பான முறையில் வீழ்த்தியதால் அந்த நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் எங்களுக்கு அதிகமாக இருக்கிறது. 

இந்தியாவைப் பொறுத்தவரை அவர்களை முன்கூட்டியே கணிப்பது மிகக் கடினம். அதிலும் உள்ளூர் மைதானங்களில் அவர்களைக் கணிக்கவே முடியாது. 

மிகச் சிறந்த வீரர்கள் அவர்களிடம் உள்ளனர். அதேசமயம், எங்களிடம் நம்பிக்கை நிறைய உள்ளது. பார்க்கலாம் என்றார் டி காக்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .