2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பதவி நீக்கப்பட்டமை குறித்து 'மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்'

Shanmugan Murugavel   / 2016 மே 24 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட லூயிஸ் வான் கால், பதவி நீக்கப்பட்டமை குறித்து மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மன்செஸ்டர் யுனைட்டெட் கழக அணியை முகாமை செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வான் கால், அவரது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பதாகவே பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

தனது ஒப்பந்தக் காலத்தை நிறைவுசெய்ய முடியாமை குறித்து வருத்தமடைவதாகத் தெரிவித்த அவர், ஆனால் எதிர்காலத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெறுவதற்கான அத்திபாரத்தை இட்டுள்ளதாக நம்பிக்கை வெளிப்படுத்தினார்.

'எனது வீரர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன், அடுத்த பருவகாலத்தில் அவர்கள் சிறப்பாகச் செயற்பட வாழ்த்துகிறேன். அவர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சிக்குரியது" என அவர் குறிப்பிட்டார். மன்செஸ்டர் யுனைட்டெட் போன்ற மிகப்பெரிய கழகமொன்றுக்குப் பணியாற்றக் கிடைத்தமை, கௌரவமிக்கது எனத் தெரிவித்த அவர், தனது நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததாகக் குறிப்பிட்டார்.

பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலக்கப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பதாகவே, எப்.ஏ கிண்ணத் தொடரை மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக வென்றுகொடுத்திருந்த வான் கால், கழகத்தின் வரலாற்றில் 12ஆவது தடவையாக அக்கிண்ணத்தை வெல்வதற்கு உதவியமை குறித்துப் பெருமையடைவதாகத் தெரிவித்தார். அத்தோடு, தனது தொழில்முறை வாழ்க்கையில், மிகவும் விசேடமான அடைவுகளில் ஒன்றாக அது இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X