Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூலை 18 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
6 ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஜப்பானிய அணி சம்பியனாகியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் முன்னாள் சம்பியனான அமெரிக்க அணியை 3-1 கோல் விகிதத்தில் ஜப்பானிய அணி தோற்கடித்தது.
ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இடைவேளை வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
69 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனை அலெக்ஸ் மோர்கன் கோல் ஒன்றை அடித்தார். 81 ஆவது நிமிடத்தில் அயா மியாமா கோலொன்றை அடித்ததால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் 1-1 விகிதத்தில் சமநிலையில் இருந்தன.
அதையடுத்து மேலதிக ஆட்ட நேரத்தில் 104 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனை அபி வயாம்பச் கோலொன்றை அடித்தார். எனினும் ஜப்பானிய வீராங்கனை ஹொமாரே சுவா கோலொன்றை அடிக்க மேலதிக நேர ஆட்டமும் சமநிலையில் முடிவுற்றது.
அதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 3 பெனால்ட்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஜப்பானிய அணி 3:1 விகிதத்தில் வெற்றி பெற்றது.
ஜப்பானிய மகளிர் கால்பந்தாட்ட அணி, இதற்கு முன் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டிகளில் 1995 ஆம் ஆண்டு மாத்திரம் கால் இறுதிக்கு முன்னேறியது. ஏனைய வருடங்களில் முதல்சுற்றுடன் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் இம்முறை சொந்த மண்ணில் விளையாடிய நடப்புச் சம்பியனான ஜேர்மனியை தோற்கடித்த ஜப்பானிய அணி அரையிறுதியில் சுவீடன் அணியை தோற்கடித்திருந்தது. இறுதிப்போட்டியில் 3 ஆவது தடவையாக சம்பியனாகி சாதனை படைக்க காத்திருந்த அமெரிக்க அணியை ஜப்பானிய அணி தோற்கடித்துள்ளது.
இச்சுற்றுப்போட்டியின் சிறந்த வீராங்கனைக்கான தங்கப்பந்து விருதையும் அதிக கோல்களை அடித்தவருக்கான தங்கப் பாதனி விருதையும் ஜப்பானியன் ஹோமாரே சவா வென்றார். வெள்ளிப்பந்தை அமெரிக்காவின் அபி வாம்பேச்சும் வெண்கலப் பந்தை அமெரிக்காவின் ஹோப் சோலோவும் வென்றனர். சிறந்த கோல் காப்பாளராக அமெரிக்காவின் ஹோப் சோலோ தெரிவானார்.
6 minute ago
18 minute ago
Nesan Monday, 18 July 2011 09:46 PM
ஆசிய அணியொன்று உலக சம்பியனாகியமை மகிழ்ச்சி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago