Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 23 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள குன்னத்தூர், களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மச்சக்காளை. விவசாயி. இவருடைய 2-வது மகள் ரூபிகா (வயது 21).
இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடி அருகே உள்ள ரெட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. பாண்டி திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். புதுமண தம்பதியான பாண்டி, ரூபிகா தலை தீபாவளியை கொண்டாட கடந்த 19-ந் திகதி களத்துப்பட்டி கிராமத்துக்கு வந்தனர். குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினர்.
இந்நிலையில் பாண்டி ரூபிகாவிடம் வேலைக்கு செல்லப்போவதாக, புதன்கிழமை (22) கூறினாராம். தலை தீபாவளி கொண்டாட வந்துவிட்டு உடனே ஏன் வேலைக்கு செல்ல வேண்டும்? என ரூபிகா கூறியுள்ளார். இருவருக்கும் இதுசம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பாண்டி வேலைக்கு சென்றுவிட்டார்.
தான் சொல்லியும் கேட்காமல் கணவர் வேலைக்கு சென்றதால் ரூபிகா மனவருத்தம் அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து புழுதிபட்டி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவகங்கை சப்-கலெக்டர் ஆயுஷ் வெங்கட்வட்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago