2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

அழுதார் பெண் வேட்பாளர்

Editorial   / 2025 ஒக்டோபர் 23 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில் மோகானியா தொகுதி ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லியில் இருந்து தேர்தல் அலுவலர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் இம்முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நான் நிச்சயமாக நீதிமன்றம் செல்வேன்’’ என்றார். அப்போது அவர் மனம் உடைந்து கண் கலங்கினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கிழக்கு சம்பாரன் மாவட்டம் சுகவுலி தொகுதி விகாஷீல் இன்சான் கட்சி (இண்டியா கூட்டணி) வேட்பாளர் சசி பூஷண் சிங்கின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X