2021 ஜனவரி 20, புதன்கிழமை

பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 08 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், ஹரியானா அணிக்குமிடையிலான பயிற்சிப் போட்டியின் முதல்நாளில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அஹமதாபாத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி இன்றைய நாள் முடிவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 408 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதலாவது விக்கெட்டுக்காக 166 ஓட்டங்களைப் பகிர்ந்த இங்கிலாந்து அணி, அதன் பின்னர் தொடர்ச்சியான இணைப்பாட்டங்கள் மூலம் ஸ்திரமான நிலையை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக கெவின் பீற்றர்சன் 94 பந்துகளில் 110 ஓட்டங்களைப் பெற்று ஓய்வுபெற்றார். தவிர, அலஸ்ரெயர் குக் 114 பந்துகளில் 97 ஓட்டங்களையும், நிக் கொம்ப்ரன் 74 ஓட்டங்களையும், இயன் பெல் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும், ஜொனதன் ட்ரொட் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹரியானா அணி சார்பாக அமித் மிர்ஷா 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

4 நாட்கள் கொண்ட இப்பயிற்சிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .