2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 09 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான டெஸ்ட் தொடர் நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியே நாளை ஆரம்பிக்கவுள்ளது.

பிறிஸ்பேணில் இடம்பெறவுள்ள இப்போட்டி இலங்கை நேரப்படி நாளை காலை 5.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.

உலகின் முதற்தர டெஸ்ட் அணியைத் தீர்மானிப்பதற்கான தொடராக இடம்பெறவுள்ள தொடராக இடம்பெறவுள்ள இத்தொடர் சுவாரசியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றாலே அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் முதலிடத்தைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்பதோடு, இத்தொடரை சமநிலையில் முடித்துக் கொண்டால் தென்னாபிரிக்க அணி தங்கள் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு அணிகளிலும் உலகத்தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் காணப்படுகின்ற நிலையில் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகத்தன்மையை வழங்கக்கூடிய ஆடுகளங்களில் இவ்விரு அணிகளுக்குமிடையிலான போட்டிகள் அதிக போட்டித்தன்மையுடன் காணப்படும் எனக் கருதப்படுகிறது.

நாளைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஷேன் வொற்சன் பங்குபற்றாத நிலையில் அவருக்குப் பதிலாக ரொப் குவைனி தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அத்தோடு பென் ஹில்பன்ஹோஸ், மிற்சல் ஸ்ரார்க், நேதன் லையன் ஆகியோரில் இருவர் பந்துவீச்சாளர்களாகக் களமிறங்கவுள்ளனர்.

தென்னாபிரிக்க அணியைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியை இங்கிலாந்தில் வைத்துத் தோற்கடித்த அணியையே அவ்வணி நாளைய போட்டியில் ஈடுபடுத்தும் எனக் கருதப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

அவுஸ்திரேலியா:
எட் கொவான், டேவிட் வோணர், ரொப் குவைனி, றிக்கி பொன்டிங், மைக்கல் கிளார்க், மைக்கல் ஹசி, மத்தியூ வேட், பீற்றர் சிடில், ஜேம்ஸ் பற்றின்சன், பென் ஹில்பன்ஹோஸ், நேதன் லையன்.

தென்னாபிரிக்க அணி:
கிரேம் ஸ்மித், அல்விரோ பீற்றர்சன், ஹசிம் அம்லா, ஜக்ஸ் கலிஸ், ஏ.பி.டி.வில்லியர்ஸ், ஜக்ஸ் ருடோல்ப், ஜே.பி.டுமினி, வேர்ணன் பிலாந்தர், மோர்னி மோர்க்கல், டேல் ஸ்ரெய்ன், இம்ரான் தாஹிர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .