2021 மே 06, வியாழக்கிழமை

பயிற்சிப் போட்டியின் முதல்நாளில் இலங்கை தடுமாற்றம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணிக்குமிடையிலான 3 நாள் பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பித்தது. இன்றைய முதல்நாள் முடிவில் இலங்கை அணி தடுமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கன்பராவில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணி இன்றைய நாள் முடிவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 390 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

முதலாவது விக்கெட்டுக்காக 47 ஓட்டங்களைப் பகிர்ந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணி, அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக 123 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான நிலையை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணி சார்பாக ஸ்கொட் ஹென்றி ஆட்டமிழக்காமல் 172 ஓட்டங்களையும், கிளென் மக்ஸ்வெல் 77 பந்துகளில் 91 ஓட்டங்களையும், அணித்தலைவர் உஸ்மான் கவாஜா 56 ஓட்டங்களையும், ட்ரவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ஷமின்ட எரங்க, சானக வெலகெதர, சுராஜ் ரந்தீவ், நுவான் பிரதீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பந்துவீச்சாளர்களில் தம்மிக்க பிரசாத் 15 ஓவர்களில் விக்கெட் எதனையும் கைப்பற்றாது 101 ஓட்டங்களை விட்டுக் கொடுத்ததோடு, சுராஜ் ரந்தீவ் தனது 23 ஓவர்களில் 121 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

ஷமின்ட எரங்க மாத்திரம் சிறப்பாகப் பந்துவீசி 13 ஓவர்களில் 8 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 22 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.

இன்றைய போட்டியில் ரங்கன ஹேரத் பங்குபற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .