2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

தென்னாபிரிக்காவைக் கண்டு அஞ்ச வேண்டாம்: இன்ஸமாம் உல் ஹக்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கத் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் தென்னாபிரிக்காவைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்ற போதிலும், துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள இன்ஸமாம் உல் ஹக், தென்னாபிரிக்காவில் களமிறங்கியது முதல் பாகிஸ்தான் அணி அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இத்தொடரில் பாகிஸ்தான் வீரர்களின் அடித்தாடும் விகிதம் அதற்கு சான்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இத்தொடரில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் தென்னாபிரிக்கப் பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்குள்ளாக்க முயன்றிருக்கவில்லை எனத் தெரிவித்த இன்ஸமாம் உல் ஹக், அதிக பந்துகளைச் சந்தித்து சிறந்த நிலையில் காணப்பட்ட போதிலும், அடித்தாட முயன்றிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பந்துவீச்சு ஓரளவு சிறப்பாகக் காணப்படுகின்ற போதிலும், துடுப்பாட்ட வீரர்கள் கைவிட்டுள்ளதாகத் தெரிவித்த இன்ஸமாம் உல் ஹக், நேர்முக எண்ணத்துடன் துடுப்பாட்ட வீரர்கள் ஆடியிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--