2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

இந்தியாவிற்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய விளையாடும் பதினொருவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இடம்பெறவுள்ள இப்போட்டி, நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள பதினொருவரில், 3 வேகப்பந்து வீச்சாளரும், ஒரு சுழற்பந்து வீச்சாளரும், ஒரு வேகப்பந்து வீசும் சகலதுறை வீரரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்படி வேகப்பந்து வீச்சைப் பிரதானமாகக் கொண்டு அவ்வணி முதலாவது போட்டியில் களமிறங்கவுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இவ்வணியில், சகலதுறை வீரரான மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளார். இவர் அவுஸ்திரேலியாவின் 432ஆவது டெஸ்ட் வீரராக மாறவுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள அணியின்படி, முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்றுவார்களா என்ற சந்தேகம் நிலவிய டேவிட் வோணர், மைக்கல் கிளார்க் இருவரும் பங்குபற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள அணி:
டேவிட் வோணர், எட் கொவான், பிலிப் ஹியூஸ், ஷேன் வொற்சன், மைக்கல் கிளார்க், மத்தியூ வேட், மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், மிற்சல் ஸ்ரார்க், பீற்றர் சிடில், ஜேம்ஸ் பற்றின்சன், நேதன் லையன்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X