2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பிக்பாஷ் லீக் போட்டி அட்டவணை அறிவிப்பு; ஷேன் வோண் ஓய்வு

A.P.Mathan   / 2013 ஜூலை 23 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டுக்கான பிக்பாஷ் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை அவுஸ்திரேலியக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டை விட அதிகரித்த எண்ணிக்கையிலான போட்டிகளைக் கொண்டு இத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
டிசெம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இத்தொடர், பெப்ரவரி 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
 
கடந்தாண்டு 44 நாட்கள் இடம்பெற்றிருந்த இத்தொடர், இம்முறை 58 நாட்கள் கொண்ட தொடராக இடம்பெறவுள்ளது.
 
இவ்வாண்டுக்கான தொடரில் ஷேன் வோண் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர் தனது ஓய்வினை அறிவித்த ஷேன் வோண், அந்தாண்டு இடம்பெற்ற பிக்பாஷ் லீக் போட்டிகளுக்கான ஓய்விலிருந்து வெளியே வந்திருந்ததோடு, கடந்தாண்டுக்கான போட்டிகளிலும் பங்குபற்றியிருந்தார்.
 
எனினும், தற்போது தான் ஓய்வுபெறுவற்கான தருணம் ஏற்பட்டள்ளதாக ஷேன் வோண் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, மெல்பேர்ண் ஸ்டார்ஸ் அணியின் தலைவராக கமரன் வைட் செயற்படவுள்ளார்.
 
தவிர, பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணி சார்பாகப் போட்டிகளின் பங்குபற்றிய மைக்கல் ஹசி, இம்முறை சிட்னி தண்டர்ஸ் அணி சார்பாகப் போட்டிகளில் பங்குபெறவுள்ளார்.
 
சிட்னி தண்டர்ஸ் அணி கடந்த 2 பருவகாலங்களிலும் இரண்டே இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றுத் தடுமாறி வருகிறது. அவ்வணியின் தலைவரான மைக்கல் கிளார்க் தேசிய அணிக்கான போட்டிகளில் பங்குபற்றவுள்ளதால், அவருக்குப் பதிலாக மைக்கல் ஹசியே சிட்னி தண்டர்ஸ் அணியின் தலைவராகச் செயற்படவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X