2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

உபாதை காரணமாக பயிற்சியில் ஈடுபடாத டேல் ஸ்ரெய்ன்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 21 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு இராச்சியத்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், பாகிஸ்தான் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்ரெய்ன் பங்குபற்றுவது தொடர்பாகச் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
 
உலகின் முதல்நிலை பந்துவீச்சாளரான டேல் ஸ்ரெய்ன், முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்றியிருந்தார். ஆனால் நேற்றைய தினம் பயிற்சிகளின் போது அவர் உபாதை காரணமாக பயிற்சிகளிலிருந்து வெளியேறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்றைய தினமும் பயிற்சிகளில் ஈடுபடவில்லை.
 
இரண்டாவது டெஸ்ட் போட்டி 23ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் அப்போட்டிக்கான முழுமையான உடற்தகுதியை டேல் ஸ்ரெய்ன் அடைந்து விடுவாரா என்ற சந்தேகம் காணப்படுகிறது. அவ்வாறு அவரால் உடற்தகுதியை அடைய முடியாது விடின் றோறி கிளெய்ன்வெல்ட்ற் அவருக்குப் பதிலாக அப்போட்டியில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
உலகின் முதல்நிலை டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான தென்னாபிரிக்காவின் ஹசிம் அம்லா தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பினை எதிர்பார்த்து தென்னாபிரிக்காவிற்குச் சென்றுள்ள நிலையில், முதல்நிலை பந்துவீச்சாளரான டேல் ஸ்ரெய்னையும் இழக்கும் அபாயத்தை உலகின் முதல்நிலை டெஸ்ட் அணியான தென்னாபிரிக்கா எதிர்கொண்டுள்ளது.
 
ஹசிம் அம்லாவும், டேல் ஸ்ரெய்னும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்றுவார்களா, இல்லையா என்ற முடிவு நாளைய தினம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--