2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சனத் - சங்கா, மஹேல கருத்து முரண்பாடு முடிவு

A.P.Mathan   / 2014 மார்ச் 26 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சனத் ஜெயசூரியா மற்றும் குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 20-20 ஓய்வு தொடர்பில் ஏற்பட்டு இருந்த கருத்து முரண்பாடு முடிவுக்கு வந்துள்ளது. இதை சனத் ஜெயசூரியா தெரிவுத்துள்ளார்.

சரியான முறையில் கருது பரிமாற்றம் நடை பெறாமையே இந்த பிரச்சினைக்கு காரணம் எனவும், தானும் குமார் சங்ககார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோரும் பேசி இந்த பிரச்சினையை முடித்து விட்டதாகவும் தங்களுக்குள் எப்போதும் நல்ல உறவு முறை இருப்பதாகவும் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது எனவும் சனத் ஜெயசூரியா உறுதியளித்துளார். இது எனது கடைசி 20-20 தொடர் என பத்திரிகை நேர்காணலில் சங்கா தெரிவித்து இருந்தாரே தவிர உத்தியோகபூர்வமாக தனது ஓய்வை அறிவிக்கவில்லை என சனத் ஜெயசூரியா கூறியுள்ளார். நல்ல முறையில் நீண்ட நேரம் இது தொடர்பாக கதைத்து சகல விடயங்களையும் சுமூகமாக தீர்த்துக் கொண்டதாக சனத் ஜெயசூரியா மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .