2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

3 ஆவது டெஸ்ட்: இலங்கை அணி நெருக்கடியில்

Super User   / 2011 ஜூன் 19 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இங்கிலாந்து அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நெருக்கடியான நிலையில் உள்ளது.

சௌதம்ப்டன் நகரில் நடைபெறும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 184 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணி போட்டியின் நான்காவது நாளான இன்று 8 விக்கெட் இழப்பிற்கு 377 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இயன் பெல் ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களைப் பெற்றார். இது இயன்பெல்லின் 13 ஆவது டெஸ்ட் சதமாகும்.

இலங்கைப் பந்துவீச்சாளர்களில் சுரங்க லக்மால் 99 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை  வீழ்த்தினார். வெலகெதர 90 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும்  திசேர பெரேரா 102 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய ஆட்டம் முடிவடைந்த போது 3 விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டடங்களைப் பெற்றிருந்தது.

பரணவிதான 10 ஓட்டங்களையும் திரிமான்ன 38 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 6 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். குமார் சங்கக்கார 44 ஓட்டங்களுடனும் ரங்கன ஹேரத் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

போட்டியின் இறுதிநாளான நாளை திங்கட்கிழமை இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துக்கொள்வதற்கு குறைந்தபட்சம் 82 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .