Super User / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் மிட்சல் ஜோன்ஸனின் அபார பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி 187 ஓட்டங்களுடன் சுருண்டது.
பேர்த் நகரில் நடைபெறும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 268 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இங்கிலாந்து அணி இன்று தனது முதல் இன்னிங்ஸில் 187 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இயன் பெல் 53 ஓட்டங்களையும் அன்ட்ரூ ஸ்ட்ரௌஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர். அவ்வணியின் 6 வீர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் மிட்சல் ஜோன்ஸன் 36 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரையன் ஹரிஸ் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மிட்சல் ஜோன்ஸன் இப்போட்டியில் தனது முதல் 4 விக்கெட்டுகளையும் 7 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
இரு வருடங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் 61 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியமையே டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் மிட்சல் ஜோன்ஸனின் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். எனினும் அதைவிட இன்றைய தனது பந்துவீச்சே தனது கிரிக்கெட் வாழ்வின் மிகச் சிறந்தது என ஜோன்ஸன் கூறியுள்ளார்.
போட்டியின் இரண்டாவது நாளான இன்று அவுஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. எனினும்; 64 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவ்வணி தனது3 ஆவது விக்கெட்டை இழந்தது. இன்றைய ஆட்டமுடிவின்போது அவ்வணி 3 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷேன் வட்ஸன் 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
28 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
2 hours ago