Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 18 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 197 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் பாகிஸ்தான் அணி வென்றதையடுத்து இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்டது.
48 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதல் விக்கெட்டை இழந்த இலங்கை அணி, 114 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 7 ஆவது விக்கெட்டையும் இழந்து நெருக்கடிக்குள்ளானது.
197 ஓட்டங்களைப் பெற்றநிலையில் அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஏஞ்சலோ மத்திவ்ஸ் மாத்திரமே அரைச்சதம் பெற்றார். 99 பந்துகளை எதிர்கொண்ட அவர், ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்றார்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ஜுனைத் கான் மிகச் சிறப்பாக பந்துவீசி 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை இதுவே முதல் தடவையாகும்.
உமர் குல் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் சயீட் அஜ்மல் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் அய்ஸாஸ் சீமா 51 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இன்று மாலை தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, இன்றைய ஆட்டமுடிவின்போது விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. (Pix by: AFP)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
6 hours ago
8 hours ago