Editorial / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் தங்களுடைய இராஜினாமாக் கடிதங்களை, ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டனரென தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அந்த 16 பேருக்கும் இடையில், இன்றிரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே, இராஜினாமா கடிதங்களை அவர்கள் கையளித்துள்ளனரென அந்தத் தகவல் தெரிவித்தது.
இன்றிரவு நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தின் போது நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதாக அல்லது இல்லையா என்பது தொடர்பில், விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்பின்னர், அந்த 16 பேரும் ஜனாதிபதியை தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, “நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், அரசாங்கத்தில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளனர்” என்றார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026